search icon
என் மலர்tooltip icon
    • வலையில் நான் பேட்டிங் செய்ததை பார்த்து ரெய்னா, பயிற்சியாளரிடம் இவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று கேட்டார்.
    • அணியில் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் வலியுறுத்தினார்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். இவர் விளையாடும் விதம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கிரிக்கெட்டிற்கான ஷாட்ஸ்களை மட்டுமே விளையாடுவார். கவர் திசையில் இவர் ஆடும் டிரைவ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

    இவர் இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்கு அப்போதைய தேர்வாளரான இருந்த திலீப் வெங்சர்கார்தான் காரணம் என்பதை விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் திலிப் வெங்சர்கார் பார்வையில் தென்படுவதற்கு சுரேஷ் ரெய்னாதான் முக்கிய காரணம். இவரால்தான் நான் தேசிய அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாட காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

    ஜியோசினிமாவிற்கு விராட் கோலி அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:-

    அந்த வருடம் 2008 என நினைக்கிறேன். இது இந்திய அணி போட்டி. ஆஸ்திரேலியாவில் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனென்றால், இதில் சிறப்பாக விளையாடினால் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்க முடியும். இதனால் எங்களை போன்ற இளம் வீரர்களுக்கு அது முக்கியமான தொடராக அமைந்தது.

    ஆகவே, ரெய்னா என்னைப் பற்றி கேள்வி பட்டிருக்கலாம் என்பது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

    அவர் தொடரின் பாதியில்தான் அணிக்கு வந்தார். முதலில் பத்ரிநாத் கேப்டனாக இருந்தார். ரெய்னா வந்ததும் அவரிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. பிரவீன் ஆம்ரே பயிற்சியாளராக இருந்தார். அவர் என்னை ஆடும் லெவனில் சேர்க்காமல் வெளியில் வைத்திருந்தார்.

    வலைப்பயிற்சியில் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த ரெய்னா ஆம்ரேவிடம், என்னை ஏன் விளையாட வைக்கவில்லை என்று கேட்டார். ரகானே தொடக்க வீரராக விளையாடுகிறார். நான் மிடில் ஆர்டரில் களம் இறக்கப்பட்டேன்.

    அணியில் என்னை இறக்குவற்கான இடம் இல்லை என்றார்.

    அப்போது ரெய்னா நான் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆகவே, பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து, தொடக்க வீரராக களம் இறங்க சம்மதமா? எனக் கேட்டார்.

    விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால், எந்த வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வேன் என நான் கூறினேன். ஆகவே, நியூசிலாந்து அணிக்கு எதிராக நான் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டேன். திலீப் வெங்சர்கார் அந்த நேரம் தேர்வாளராக இருந்தார். நான் நியூசிலாந்துக்கு எதிராக 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன். எனக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் அப்போதே முடிவு செய்திருக்கலாம்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

    அதே ஆண்டில் விராட் கோலி இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

    • முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர்.
    • ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன், ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம்.

    முன்பு சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இப்போது எனது உதவியாளரை சிறையில் அடைத்துள்ளனர். இனிமேல் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை சிறையில் அடிப்போம் என கூறுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பாஜக ஏன் விரும்புகிறது.

    நாங்கள் என்ன தவறு செய்தோம். டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு தரமான கல்வி கொடுத்தது தான் நாங்கள் செய்த தவறு. ஏனெனில் பாஜகவால் அதை செய்ய முடியாது. மொஹல்லா க்ளினிக்குகளை உருவாக்கி மக்களுக்கு மருத்துவ சேவை செய்தது எங்கள் தவறு. பாஜகவால் இதை செய்ய முடியாததால் மொஹல்லா க்ளினிக் திட்டத்தை நிறுத்த வேண்டுமென பாஜக விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    சுவாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைதான நிலையில் வீடியோ வெளியிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது.
    • ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஒய்எஸ்ஆர்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஐந்து மாதங்களாக பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது. தேர்தலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளார்.

    ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் விஸ்ட்ஜெட் மூலம் புறப்பட்ட நிலையில் இன்று லண்டன் சென்றடைந்தார்.

    முதலமைச்சருடன் அவரது மனைவி ஒய்.எஸ். பாரதி மற்றும் மகள்கள் ஹர்ஷா மற்றும் வர்ஷா உள்ளனர்.

    லண்டனை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்குச் செல்கின்றனர்.

    நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 1 ஆம் தேதி அன்று நாடு திரும்புகிறார்.

    • தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது.

    சிங்கப்பூரில் மீண்டும் புதிய கோவிட் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    இதுபற்றி சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பேசுகையில், நாட்டில் கொரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

     

    கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொலாத பட்சத்தில் விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர்.
    • நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

    உடலை மிகவும் ஃபிட்டாக மற்றும் உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்துபவர் நடிகர் அதர்வா.

    நடிகர் அதர்வா கடந்த ஆண்டு வெளியான மத்தகம் என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அதர்வா மற்றும் மணிகண்டன் அந்த வெப் தொடரில் நடித்து இருந்தனர். வெப் தொடர் மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றது.

    இதற்கிடையில் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக 'டிஎன்ஏ' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நெல்சன் வெங்கட் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து நடிகர் அதர்வா லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். சமீபத்தில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார்.

    நிஹாரிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நிஹாரிகா நகைச்சுவை பாணியில் வீடியோகளை வெளியிடுவதில் திறம் பெற்றவர் .

    அதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நிஹாரிகா 5 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய திறம் பெற்றவர்  அதனால் இவர் எந்த மொழியிலும் நடிகையாக நடித்து வளம் வர வாய்ப்பு அதிகம். இவர், அதர்வா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேசமயம் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
    • விளக்க மனு தாக்கல் செய்யாததால் அபராதம் விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

    பிடியாணைக்கு எதிரான இந்த வழக்கில், குறிப்பிட்ட காலத்திறகுள் விளக்க மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதமாக விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டில், அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    சாயிபாசா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    • நாளடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
    • இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது.

    நாளடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் என அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகள் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்க உள்ளன. அதைத்தொடர்ந்து மே 25 ஆம் தேதி நடக்கும் 6 ஆம் கட்ட வாக்குபதிவு நாளன்று டெல்லிக்கு ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்து முடியும்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. நேற்று இந்த வசதி மூலம் மொத்தம் 1409 பேர் வாக்களித்த நிலையில் இன்று வடக்கு டெல்லி உட்பட பல்வேறு தொகுதிகளில் மொத்தம் 2956 பேர் வாக்களித்தனர்.

    அதன்படி டெல்லியில் வசித்து வரும் பல்வேறு காட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் இன்று (மே 18) வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரும் மன்மோகன் சிங் நேற்று தனது வீட்டில் இருந்தபடியே தனதுஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

     

    முன்னாள் உள்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் முகமத் ஹமீத் அன்சாரி ஆகியோரும் நேற்றைய தினம் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவை மூத்த தலைவர் எல்.கே அத்வானி இன்று தனது இல்லத்தில் இருந்தபடியே வாக்களித்தார். 

    • தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை.
    • வரும் 19, 20, 21 ஆகிய நாட்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்.

    தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், வரும் 19, 20, 21 ஆகிய நாட்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை அறுவுறுத்தியுள்ளது.

    பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள்.
    • நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்த போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள். நானும் அவரும் திரும்பவும் விளையாடுவோமா? ஒருவேளை இதுதான் கடைசிப் போட்டியா? எது நடக்கும் என்று தெரியாது.

    நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

    42 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற போகிறார் என்பதைத்தான் விராட் கோலி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது.
    • இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. லஞ்சத்தை எதிர்த்து போராடும் சுதந்திர போராட்ட தியாகி என்ற ஒன் லைனர் சேனாபதி கதாபாத்திரத்தில் கமலின் தனித்துவமான நடிப்பில் மெருகேறியிருக்கும். இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் ஜூலை 12 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    முன்னதாக ஜூன் மாதமே படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் 1 மாதம் தாமதமாக படம் வெளியாவது ரசிகர்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் ரசிகர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில், படத்தைக் குறித்த மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியன் 2 டிரைலர் விரைவில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்படும் என்றும் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான டிரைலரும் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்தியன் 2 படத்தின் கதை மிக நீளமாக சென்றதால் படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவெடுக்கப்பட்டு அதன்படி, இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே படத்தின் ரிலீஸும் தாமதமாகியுள்ளதாக தெரிகிறது. எது எப்படியாக இருந்தாலும் சேனாபதியை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

    இதற்கிடையே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ஆரசிபி மோதும் மேட்ச் இன்று (மே 18) மாலை சின்னச்சாமி அரங்கில் நடைபெற உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லைவில் மாலை 6மணியளவில் இயக்குனர் சங்கரும், கமல்ஹாசனும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×